- விவரங்கள்
-
பிரிவு: Services
கமநல சட்டம் (கமநல அபிவிருத்தி சட்டம்) - இலங்கையின் அனைத்து விவசாயிகள் மற்றும் காணி உரிமையாளர்கள்
நோக்கங்கள் - காணி உரிமையாளர்களின் மற்றும் விவசாயிகளின் பயிர்செய்கை உரிமைகளைப் பாதுகாத்தல்
- 2011ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல சட்டத்தின் திருத்தம்
- 2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தை செயற்படுத்துதல்
- விவசாய காணி பதிவேடுகளை மீள்நோக்குதல் மற்றும் இற்றைப்படுத்தி பேணுதல்
- வாரக்குடி விவசாயிகளுக்கும் காணி உரிமையாளர்களுக்குமிடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்தல்
- பயிர்ச்செய்கை உரிமையைப் பாதுகாத்துக்கொடுத்தல்
- சிறிய நீர்பாசனத்தைப் பாதுகாத்தல் மற்றும் பயிர்ச்செய்கை ஒழுங்குவிதிகளை செயற்படுத்துவதை உறுதிப்படுத்துதல்.
- சட்ட ஆலோசனை சேவை
- நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
- ஆணையாளர் நாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணைகளை நடத்துதல்
விவசாய காணிகளை முகாமைப்படுத்துதல் / அனைத்து விவசாய காணிகள்
நோக்கங்கள் - விவசாய காணிகளின் அதிசிறந்த உற்பத்தி திறன் வளர்ச்சி
- விவசாய காணிகளின் உற்பத்தித்திறனின் அடிப்படையாகக் கொண்ட தரவு தளமொன்றைத் தயாரித்தல்
- விவசாய காணிகளை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்துவித்தல் (அதிசிறந்த பயன்பாடு)
- விவசாய காணிகளின் உற்பத்தித்திறனுக்கு தேவையான நிதி உதவிகளை / சேவை வசதிகளை அளித்தல்
- தேசிய விவசாய உற்பத்தி திட்டத்தை (செயற்பாட்டு திட்டம்) செயற்படுத்துவதற்குத் தேவையான தகவல்களை வழங்குதல்
நோக்கங்கள் - விவசாய காணிகளின் அதிசிறந்த உற்பத்தி திறன் வளர்ச்சி
நோக்கங்கள் - இலங்கைவாழ் விவசாயிகளை ஒழுங்கமைத்தல்
- இலங்கையில் விவசாய மக்களுக்குத் தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு உரிய பின்னணியை உருவாக்குதல்
- கமநல அமைப்புகளை வகைப்படுத்துதல்
- விவசாயிகளின் ஒழுங்கமையும் சக்தியைக் கட்டியெழுப்புதல்
- கமநல சேவை நிலைய அபிவிருத்தி மற்றும் வளங்கள் என்ற வகையில் ஊக்குவித்தல்
- கமநல சேவை அதிகார பிரதேசங்களை பொருத்தமான வகையில் அடையாளம் காணுதல்
கிராமிய நீர்ப்பாசன முறைமையை முகாமைத்துவம் - கிராமப்புற நீர்ப்பாசன முறைமை
நோக்கங்கள் - கிராமிய நீர்ப்பாசன முறைமையை முகாமைப்படுத்துவதன் மூலம் நீர்ப்பாசன வினைத்திறனை உயர்த்துதல்
- கிராமிய நீர்ப்பாசன முறைமையை அடையாளம் காணுதல் மற்றும் தரவுகள் பின்னணியை முகாமைப்படுத்துதல்
- கமநல அமைப்புகளை கிராமிய நீர்ப்பாசன முறைமைகளின் உண்மையான மரபுரிமையாளர்களாக்குதல்
- கிராமிய நீர்ப்பாசன வினைத்திறன் மற்றும் நீர் உற்பத்தித்திறன் மதிப்பீடு என்பவை தொடர்பான தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்
- கிராமிய குளங்களை ஆழமாக்குதல்
- விவசாய பாதைகளை அமைத்தல்
- கிராமிய நீர்ப்பாசனத்தை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல்
- கிராமிய நீர்ப்பாசனத்தின் கீழ் பயிர்ச்செய்கை போகத்தை திட்டமிடுவதற்கு உதவுதல்
- செயற்படும் ஆய்வுகள் ஊடாக பொருத்தமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
விவசாய இயந்திர உபகரணங்கள் / அனைத்து விவசாயிகள்
நோக்கங்கள் - விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்களை அறிமுகப்படுத்துதல்
- விவசாய இயந்திர உபகரணங்களின் தேவையை அடையாளம் காணுதல்
- விவசாய இயந்திர உபகரணங்களைப் பேணுதல் மற்றும் பராமரித்தல்
- விவசாய இயந்திர உபகரணங்களை வழங்குதல்
- விவசாய இயந்திர உபகரணங்களுக்காக தரவு தளமொன்றை அமைத்தல்
மனித வளங்கள் முகாமைத்துவம் - அனைத்து திணைக்கள ஊழியர்கள்
1. நோக்கங்கள் - நிறுவன நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க வகையில் முறையாகப் பேணுதல்
- பணியாட் தொகுதியினரை ஆட்சேர்ப்புசெய்தல் மற்றும் பயனுறுதிமிக்க வகையில் நிலையப்படுத்துதல்
- ஒழுக்காற்று கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்துதல்
2. நோக்கங்கள் - திணைக்கள ஊழியர்களின் செயலாற்றுகை பின்னணியை அபிவிருத்திசெய்தல்
- திணைக்கள ஊழியர்களின் திறன்விருத்தி
- ஊழியர் நலனோம்பல் மற்றும் ஊக்குவித்தல்
- ஊழியர்களின் வேலைகளைப் பிரித்துக்கொள்ளுதல் மற்றும் செயலாற்றுகை மதிப்பீடு
3. நோக்கங்கள் - ஊழியர் நிர்வாக நடவடிக்கைகளை முறையாகப் பேணுதல்
- அலுவலக முகாமைத்துவத்தை முறையாகப் பேனுதல்
- சம்பள திட்டங்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைத் தயாரித்தல்
- ஊழியர்களுக்கு நிவாரணமளிப்பது தொடர்பான நடவடிக்கைகள்
4. நோக்கங்கள் - திணைக்கள ஊழியர்களுக்காக உரிய சேவை வசதிகளை வழங்குதல்
- கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் நடாத்துதல்
- ஊழியர்களுக்காக உரிய அலுவலக தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் திட்டமிடல்
- திணைக்கள பணியாட் தொகுதியினருக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குதல்
செயற்பாடு மற்றும் மதிப்பீடு - அனைத்து விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்
நோக்கங்கள் - திணைக்களத்தில் செயற்படுத்துகின்ற நிகழ்ச்சித்திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் மதிப்பீடுசெய்தல்
- திணைக்களத்தின் வளங்களை முகாமைப்படுத்தும் திட்டங்களைத் தயாரிப்பதற்கு வழி காட்டுதல்
- திணைக்களத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களைத் திட்டமிடுதல், செயலாற்றுகை மற்றும் செயல் விளைவுகளை மதிப்பீடு செய்தல் என்பவற்றிற்கு உதவுதல்
- திணைக்களத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை இணைப்பாக்கம் செய்தல்
- விவசாய தரவு தளத்தை முகாமைப்படுத்துதல்