இந்தப் பிரிவின் பின்வரும் நோக்கத்தை அடையும் பொருட்டு கமநல அபிவிருத்தி மாவட்ட அலுவலகங்கள் மூலம் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக அங்கீகாரமளித்தல், கண்காணித்தல், அதன் பிரகாரம் மாவட்ட அலுவலகங்களின் நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்து திணைக்களத்தின் நிதி வளங்களை முகாமைப்படுத்துவது இப்பிரிவின் பொறுப்பாகும்.
சேவைகள்
- நடப்பு ஆண்டின் சிறிய நீர்ப்பாசன புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற கைத்தொழில்களுக்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் இணைப்பாக்கம் செய்தல்.
- வருடாந்த வரவுசெலவு திட்ட மதிப்பீட்டின் மூலம் நிதி ஒதுக்கப்படுகின்ற இந்த திணைக்களத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற கட்டிடங்களைப் புதுப்பித்தல், புதிய கட்டிடங்களை நிர்மாணித்தல், பசளை களஞ்சியங்களை நிர்மாணித்தல், கைத்தொழில்களுக்கு உரியதாக மதீப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளுதல், நிதி ஒதுக்கீடுசெய்தல், விலை மனு கோரும் நடவடிக்கைகளுக்காக ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் போன்ற அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுதல்.
- திணைக்களத்திற்கு உரிய கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவைப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் திணைக்கள வசமுள்ள காணிகள் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை எடுத்தல்.
- தேசிய புத்தரிசி விழாவை நடத்துவதற்குரிய அனைத்து இணைப்பாக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.
- கமநல அபிவிருத்தி நிதியம் மற்றும் விவசாயிகளின் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் கீழ் வருடாந்தம் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய இணைப்பாக்கத்தை மேற்கொள்ளுதல்.
- பிரிவின் பொறுப்பில் உள்ள அனைத்து இயந்திர உபகரணங்களைப் புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் குறித்த செலவு தலைப்புகளின் கீழுள்ள நிதி ஏற்பாடுகளை முகாமைப்படுத்துவது தொடர்பில் செயலாற்றுதல்.
- அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அனுப்பப்படுகின்ற பொதுமக்களின் கோரிக்கைகள், அரசியல் அதிகாரசபைகள் மூலம் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள், ஜனாதிபதி அலுவலகம், பிரதம அமைச்சர் அலுவலகம் என்பவற்றிலிருந்து முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் தொடர்பாக மாவட்டத்துடன் சிறந்த இணைப்பாக்கத்தைப் பேணுதல்.
நோக்கங்கள்
- விவசாயத்தின் வளர்ச்சிக்காக நீர்ப்பாசன கைத்தொழிலை மேம்படுத்துவதன் ஊடாக தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பங்களிப்புச் செய்தல்.
- கட்டிடங்களைப் புதுப்பித்தல் மற்றும் நிர்மாணங்கள் மூலம் உத்தியோகத்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அதன்மூலம் விவசாய மக்களுக்கு பயனுறுதி மிக்க மற்றும் வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குதல்.
- இதற்காக இந்தப் பிரிவு கமநல அபிவிருத்தி ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்குகின்ற அதே நேரத்தில், மொத்த பணியாட் தொகுதி பின்வருமாறு அமைகின்றது.
பிரிவின் மூலம் வெளி நபர்களுக்கு வழங்கப்படுகின்ற தகவல்களும் அவைபற்றிய விபரங்களும்
அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பாக வெளி தரப்பினரிடமிருந்து முன்வைக்கப்படுகின்ற கோரிக்கை/முரண்பாடு முன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பதில் மாத்திரம் வழங்கப்படுகின்றது.
திரு. ஏ.எச்.எம்.எல். அபேரத்ன கமநல அபிவிருத்தி ஆணையாளர் |
பெயர் | பதவி | தொலைபேசி |
திரு. எச்.ஆர்.வி.பி. விஜேவர்தன | ஆணையாளர் (அபிவிருத்தி) | +94 715 349 106 |
செல்வி. பீ.கே. பத்பேரிய | உதவி ஆணையாளர் (அபிவிருத்தி) | +94 711 249 340 |