கமநல அபிவிருத்தி ஆணையாளர் மனித வள அபிவிருத்தி பிரிவு +94 777 546 080 |
நிர்வாகப் பிரிவு மற்றும் பயிற்சிப் பிரிவு
நிர்வாகப் பிரிவு
நிர்வாக பிரிவின் மூலம் நிறைவேற்றப்படுகின்ற பிரதான சேவைகள், திணைக்களத்திற்கு கிடைக்கும் அனைத்து சாதாரண கடிதங்கள், பதிவு கடிதங்கள் மற்றும் காசோலைகள் என்பவற்றை அந்தந்த பிரிவுகளுக்கு அனுப்புதல் மற்றும் அந்தந்த பிரிவுகளிலிருந்து கிடைக்கும் அனைத்து கடிதங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தலாகும்.
- திணைக்களத்தின் பாதுகாப்பு மற்றும் துப்புரவு நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்தல்.
- பாராளுமன்றத்தின் ஆலோசனை குழுவுக்கு உரிய நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்தல்.
- பாராளுமன்ற வாய்மூல வினாக்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்தல்.
- அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படுத்தப்படுகின்ற 'ஜனதிபதிக்கு சொல்லுங்கள்' பொதுமக்களின் மனக்குறைகளுக்கு நிவாரணமளிக்கும் பொறிமுறையின் நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்தல்.
- பொது மனு குழுவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்தல்.
- நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற ஆணையாளர் (குறைகேள் அதிகாரி) அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவையுடன் சம்பந்தப்பட்ட இணைப்பாக்க நடவடிக்கைகள்.
- திணைக்களத்தின் அனைத்து தொலைபேசி பட்டியல்கள், மின்சார பட்டியல்கள், நீர் பட்டியல்கள் என்பவற்றைச் செலுத்துதல் மற்கும் ஆதன வரி கட்டணங்களைச் செலுத்துதல்.
- தலைமை அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் விடுமுறை தொடர்பான அலுவல்கள்.
- திணைக்களத்தின் உள்ளக தொலைபேசி முறைமையின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- உத்தியோகபூர்வ இல்லங்களின் வாடகை அறவிடல்.
- திணைக்களத்திற்கு கொள்வனவுசெய்யப்படுகின்ற பத்திரிகைகள் தொடர்பான கடமைகள்.
- திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் புகையிரத ஆணைச்சீட்டுக்களை வழங்குதல்.
- புகையிரத அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்.
- தலைமை அலுவலகத்தின் நேரடி தொலைபேசி முறைமையைப் பராமரித்தல்.
- தீயணைப்பு உபகரணங்களைப் பராமரித்தல்.
- அரச தேர்தல் சம்பந்தப்பட்ட கடமைகளை மேற்கொள்ளுதல்.
- திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகயை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை ஒழுங்குசெய்தல்.
- அரச உத்தியோகத்தர்களின் பிணை வைப்புகளை விடுவிப்பதற்கு உரிய கடமைகளை மேற்கொள்ளுதல்.
பதவிநிலை உத்தியோகத்தர்கள்
வெற்றிடம் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் |
பதவி | අයත්වන සේවය / පන්තිය | සිටින නිලධාරීන් සංඛ්යාව |
உதவி ஆணையாளர் | இலங்கை நிர்வாக சேவை தரம் III | 01 |
பிரதான அரச முகாமைத்துவ உதவியாளர் | அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் I | 01 |
சுருக்கெழுத்தாளர் | தரம் I | 01 |
அரச முகாமைத்துவ உதவியாளர் | அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் III | 05 |
நிலைய முகாமைத்துவ உதவியாளர் | நிலைய முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் III | 02 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் | அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் III | 02 |
அலுவலக சிற்றூழியர் | அலுவலக சிற்றூழியர் சேவை | 02 |
தொழிலாளர் | தொழிலாளர் சேவை | 02 |
காவலாளி | காவலாளி சேவை | 01 |
பயிற்சி பிரிவு
திணைக்களத்தின் நோக்கை அடைவதற்காக உத்தியோகத்தர்களின் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளுவதற்கு பயிற்சி பிரிவு செயற்படுகிறது. அங்கு வழங்கப்படுகின்ற பயிற்சியின் மூலம் உத்தியோகத்தர்கள் தமது தொழிலை வினைத்திறன்மிக்க வகையிலும் உற்பத்தித்திறன் மிக்க வகையிலும் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நோக்கங்கள்
- திணைக்களத்தின் உயர் உற்பத்தித் திறனுக்காக உத்தியோகத்தர்களின் திறனையும் ஆற்றலையும் விருத்திசெய்தல்.
- உத்தியோகத்தர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்துரைக்கப்பட்ட பணிகளை புலமைமிக்க வகையில் நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவையும் திறமையையும் வழங்குதல்.
- உத்தியோகத்தர்களை நிறுவனத்தின் நோக்கத்தை நோக்கி வழிநடத்துவதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் தொழில் பொறுப்புகளை அடையாளம் காண்பதற்கும் அதற்கான சுய புரிந்துணர்வையும் அதிக அறிவையும் வழங்குதல் மற்றும் நல்ல மனோபாவங்களை ஊக்குவித்தல்.
- நவீன தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் அதனூடாக உற்பத்தி திறனை உயர்த்துதல்.
பயிற்சி வகைகள்
- சேவை ஆரம்ப பயிற்சியை வழங்குதல்
- தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது பயிற்சி வழங்குதல்
- தொழிலுக்குப் புறம்பான பயிற்சி
- வெளிநாட்டு பயிற்சி
தாபனப் பிரிவு
இந்த திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சேவையாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட கோவை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் இந்த பிரிவில் மேற்கொள்ளப்படுவதோடு, அவர்களின் சம்பள மாற்றங்கள் போன்ற நடவடிக்கைகளும் எமது பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் எமது திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் நிறுவன நடவடிக்கைகளும் மனித வளங்கள் தொடர்பான நடவடிக்கைகளும் இந்த பிரிவின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது. உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல், சேவையில் நிரந்தரப்படுத்துதல், பதவி உயர்வு, இடமாற்றம், ஓய்வு பெறுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் இந்த பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
- திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட கோவை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைப் பேணுகின்றது.
- ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை ஊழியர்களின் எண்ணிக்கையை இற்றைப்படுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தகவல்களை வழங்குகின்றது.
- திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் நன்னடத்தைக் காலம் முடிவடைந்தவுடன் உரிய தகைமைகளைப் பூர்த்திசெய்திருந்தால் அந்த உத்தியோகத்தர்களின் சேவையை நிரந்தரப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தல்.
- அந்தந்த சேவைகளுக்கு உரிய ஆட்சேர்ப்பு சுற்றறிக்கைகளுக்கு அமைவாக உரிய சேவைக்காலத்தையும் ஏனைய தேவைகளையும் நிறைவுசெய்கின்ற உத்தியோகத்தர்களை குறித்துரைக்கப்பட்ட திகதிகளுக்கு உரிய தரங்களுக்கு உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தல்.
- திணைக்களத்தில் வெற்றிடங்கள் நிலவும் பதவிகளுக்கு அந்தந்த பதவிகளுக்கு உரியதாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைமுறைகளுக்கு அமைவாக ஆட்சேர்ப்பு செய்தல்.
- ஆட்சேர்ப்பு நடவடிக்கைமுறையை இணங்கியொழுகி திணைக்களத்தில் உள்ள பதவிகளுக்கும் சாரதி சேவைகளுக்கும் உரியதாக உத்தியோகத்தர்களின் வினைத்திறன் தடைகாண் பரீட்சைகளை நடத்துதல் மற்றும் அவற்றின் பெறுபேறுகளை வெளியிடுதல்.
- திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் மேலதிக நேர சேவைகளுக்காக திணைக்களங்களின் பிரதானிகளின் வரையறைக்குள் மேலதிக நேர அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அதற்கு மேலதிக மணித்தியாலங்களுக்காக அங்கீகாரம் பெறுவதற்கு அமைச்சுக்கு அனுப்புதல்.
- திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் சம்பள ஏற்றத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உட்பட்டு சம்பள ஏற்றத்தை வழங்குதல் மற்றும் குறித்த சம்பள சுற்றறிக்கை பிரகாரம் சம்பள மாற்றங்களைச் செய்தல்.
- திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் 55 - 60 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஓய்வு பெறுவதற்கு அனுமதியளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- அங்கீகரிக்கப்பட்ட வருடாந்த இடமாற்ற நடவடிக்கைமுறைக்கு அமைவாக வருடாந்த இடமாற்றம் மற்றும் உத்தயோகத்தர்களின் தேவைக்கேற்ப நட்புறவு இடமாற்ற நடவடிக்கைககள் மூலம் உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்தல்.
- திணைக்கள உத்தியோகத்தர்களுக்காக சொத்துக் கடன் தேவைப்படும்போது குறித்த ஆவணங்களுடனான பரிந்துரையுடன் உரிய அரச வங்கிளுக்கு அனுப்புதல்.
- தலைமை அலுவகத்தின் காப்புறுதி பயன்களைப் பெற்றுக்கொள்ளுவதற்குத் தேவையான உத்தியோகத்தர்களின் குறித்த பத்திரங்களையும் விண்ணப்பங்களையும், புதிய அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் விண்ணப்பங்களையும், இலத்திரனியல் அட்டைக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பங்களையும் பெற்றுக்கொண்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை அலகுக்கு அனுப்புதல்.
- அனைத்து மாவட்ட பதவிநிலை மற்றும் தொழில்நுட்ப உத்தியோத்தர்களின் விடுமுறை தின சம்பள விண்ணப்பங்களுக்கு குறித்த சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் பிரகாரம் அங்கீகாரமளித்தல்.
- அனைத்து மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களின் எதிர்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள், செய்த வேலைத்திட்டங்கள் மற்றும் பிரயாண செலவுகள் என்பவற்றிற்கான வவுச்சர்களுக்கு அங்கீகாரமளித்தல்.
- சீருடை கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உரித்துள்ள உத்தியோகத்தர்களுக்கு சீருடை கொடுப்பனவுக்காக அங்கீகாரமளித்தல்.
பதவிநிலை உத்தியோகத்தர்கள்
திருமதி. டபிள்யு.கே. ரணசிங்ஹஆராச்சி கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் (தாபனம்) +94 718 220 836 |
பெயர் | பதவி | தொலைபேசி |
திருமதி. டபிள்யு.கே. சீதா | நிர்வாக உத்தியோகத்தர் (தாபனம்) | +94 718 205 626 |
ஒழுக்காற்றுப் பிரிவு
- உத்தியோகத்தர்களினால் நிகழ்கின்ற எந்த விதத்திலான தண்டனைக்குரிய அனைத்து தவறுகள் அல்லது தீய செயல்கள் தொடர்பாக ஸ்தான கோவையின் IIவது தொகுதியில் XLVIII அத்தியாயத்தை இணங்கியொழுகி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்.
- உத்தியோகத்தர் ஒருவரின் வினைத்திறன் இன்மை, கவனமின்மை, நேர்மை இன்மை, முறையற்ற நடத்தை, அலட்சியம், ஒழுக்கமின்மை மற்றும் மோசடி மற்றும் ஊழல் என்பவற்றைத் தடுப்பதற்காக ஸ்தான கோவையின் IIவது தொகுதியில் XLVIII அத்தியாயத்தை இணங்கியொழுகி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்.
நோக்கங்கள்
- களவு, மோசடி மற்றும் ஊழல் என்பவற்றைத் தடுத்தல்
- வினைத்திறன்மிக்க சேவையொன்றை பொதுமக்களுக்கு வழங்குதல்
- அரச வளங்களும் நிதியும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல்
- எதிர்பார்க்கப்படும் நடத்தைகள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளித்தல்
- அலுவலக வளாகத்தில் நல்ல ஒழுக்கத்தை மதிக்கும் நபர்களை உருவாக்குதல்
சேவைகள்
- ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளுதல்
- குற்றப்பத்திரங்களைத் தயாரித்தல்
- முறையான ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துதல்
- ஒழுக்காற்று பணிப்புரைகளை வழங்குதல்
- அரச சேவை ஆணைக்குழுவுக்கும் நிர்வாக மேன்முறையீட்டு அதிகாரசபைக்கும் அனுப்புகின்ற மேன்முறையீடுகள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்குதல்
- பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் அறிக்கைகளை அழைப்பித்தல்
- கணக்காய்வு அறிக்கைகளின் மூலம் தெரிவிக்கப்படுகின்ற விடயங்களுக்கு உரியதாக விசாரணைகளை மேற்கொள்ளுதல்
- நி.பி.104 விசாரணைகளை நடத்தி பணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல்
பதவிநிலை உத்தியோகத்தர்கள்
திருமதி. டபிள்யு.டீ.ஆர்.ஜே. றொட்ரிகோ கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் +94 719 720 482 |
போக்குவரத்துப் பிரிவு
கமநல சேவைகள் திணைக்களம் இலங்கை வாழ் விவசாய மக்களின் வளர்ச்சிக்காக முன்னணி பணிகளை நிறைவேற்றுகின்ற திணைக்களமாகும். கமநல அபிவிருத்தி சட்டத்திற்கு உரிய நடவடிக்கைகள், தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், தரிசு வயல்களில் பயிர்ச்செய்தல், 'சிதமு மகளிர் விவசாய அமைப்பை' செயற்படுத்தும் நடவடிக்கைகள், ஆயிரம் குளங்கள் ஆயிரம் கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டம், வீட்டுத் தோட்ட நிகழ்ச்சித்திட்டங்கள், சேதன பசளை அலகுகளை அமைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல், இரசாயன பசளை விநியோகம், சிறிய நீர்ப்பாசன அபிவிருத்தி, விவசாய பாதைகளை அபிவிருத்திசெய்தல், விவசாயிகளுக்குத் தேவையான பொருட்கள், உபகரணங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை வழங்குதல் உள்ளிட்ட விரிவான பரப்பெல்லையில் செயலாற்றுவதற்காக 18376 அங்கீகரிக்கப்பட்ட பணியாட் தொகுதியினரை வழிநடத்தி தலைமை அலுவலகம், 25 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 561 கமநல சேவை நிலையங்கள் என்பவற்றில் செயலாற்றுவதற்காக போக்குவரத்து வசதிகளை வழங்குவது இந்த பிரிவின் பிரதான கடமையாகும்.
தற்பொழுது பிரிவுக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர் இயந்திர அதிகாரி (போக்குவரத்து)யின் கீழ் பணியாட் தொகுதியினர் 33 பேர் உள்ளனர்.
சேவைகள்
- தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலகங்கள் என்பவற்றில் உள்ள வாகனங்களின் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- வாகன விபத்துகள் தொடர்பாக நி.பி.பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுத்தல்.
- சேதம் மற்றும் நட்டம் தொடர்பான பதிவேடுகளைப் பேணுதல்.
- ஒதுக்கீட்டு கணக்குகளைத் தயாரித்தல்.
- ஒட்ட பதிவேடுகளைப் பரீட்சித்தல் மற்றும் கணக்காய்வுக்கு சமர்ப்பித்தல்.
- கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில் தயாரித்தல்.
- வாகன காப்புறுதி
- இலவச வருமான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
- வருடாந்த செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்.
- எரிபொருள் வழங்குதல், பட்டியல்களுக்கு பணம் செலுத்தி தீர்த்தல்.
- பழுதுபார்த்தல் தொடர்பான சம்பவ குறிப்பேட்டைப் பேணுதல்.
- புதிய வாகனங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
- சாரதிகள்/சாரதி உதவியாளர்கள் ஆகியோரின் விடுமுறைகளைத் தயாரித்தல் மற்றும் மேலதிக பிரயாண செலவு பத்திரங்களைப் பரிசீலித்தல்.
- உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களுக்கு மாதாந்த எரிபொருள் கட்டணங்களைச் செலுத்துவதற்கு வவுச்சர் தயாரித்தல்.
- உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு பெற்றுக்கொள்ளுகின்ற மேலதிக எரிபொருளுக்காக விவசாய அமைச்சு செயலாளரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
- எரிபொருள் முற்பணம் செலுத்துதல் மற்றும் கணக்கு தீர்த்தல்.
- பழைய வாகனங்களை துஷ;பிரயோகித்து விற்பனைசெய்தல்.
- கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தினால் பணிக்கப்படுகின்ற ஏனைய பணிகளை நிறைவேற்றுதல்.
பதவிநிலை உத்தியோகத்தர்கள்
திரு. பி.ஏ.ஏ. வீரவங்ஷ கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் |
பெயர் | பதவி | தொலைபேசி |
திரு. பி.ஏ. ஆனந்த வீரவன்ஸ | இயந்திர அதிகாரி (போக்குவரத்து) | +94 776 613 002 |
திருமதி. டபிள்யு.ஏ.எச். சதுரிக்கா | அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 776 112 722 |
திருமதி. கே.ஏ. யசோதா நிமங்சனி | அரச முகாமைத்துவ உதவியாளர் | +94 782 444 410 |
திருமதி. டபிள்யு.பி. ஸ்ரீயானி | அரச முகாமைத்துவ உதவியாளர் | +94 718 204 161 |
திருமதி. திலினி ஷாலிகா குலதுங்க | பயிலுநர் அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 718 823 174 |
திருமதி. கே.டீ. அயேஷா மானகே | பயிலுநர் அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 714 990 971 |
திருமதி. ஏ.ஜி.ஏ.எஸ். சம்மானி | பயிலுநர் அபிவிருத்தி உத்தியோகத்தர் | +94 714 757 267 |
திருமதி. ஜே.ஏ.டி.ஆர். ஜயசிங்க | அலுவலக உதவியாளர் (சிற்றூழியர்) | +94 716 507 890 |