நி.பி. 133, 134 என்பவற்றின் பிரகாரமும் 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38 (இ) மற்றும் 40 (1) உப பிரிவுகளின் பிரகாரமும் இந்த திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவொன்று செயற்படுகின்ற அதேவேளையில் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூறும் வித்தில் அது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
உள்ளக கணக்காய்வு பிரிவின் விடயப்பரப்பில் கமநல அபிவிருத்தி திணைக்களம், மாவட்ட அலுவலகங்கள், கமநல செயற்குழு, கமநல வங்கி (முன்னோடி) கருத்திட்டம், கமநல அமைப்புகள், கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அவர்களால் பணிக்கப்படுகின்ற விசேட விசாரணைகள் மற்றும் கமநல அபிவிருத்தி நிதியம் என்பவை உள்ளடங்குகின்றன.
சேவைகள்
வருடாந்தம் தயாரிக்கப்படுகின்ற கணக்காய்வு திட்டத்திற்கு அமைவாக மாதாந்தம் தயாரிக்கப்படுகின்ற கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஆணையாளர் நாயகம் வழங்குகின்ற அங்கீகாரத்தின் மீது மேற்குறிப்பிட்ட விடயப்பரப்பில் உள்டங்கும் வகையில் இருக்கின்ற பணியாட் தொகுதியினரை வினைத்திறன் மிக்க வகையில் ஈடுபடுத்தி உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
திரு. எம்.எல்.எல்.எஸ். ரணவீர +94 714 833 652 |