2014ஆம் ஆண்டிலிருந்து செயற்பாட்டு மற்றும் மதிப்பீட்டு பிரிவு முறைசார்ந்த விதத்தில் கமநல சேவை திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற விவசாய அபிவிருத்திக்கு உரிய வளங்களை முகாமைப்படுத்துதல், திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் ஏனைய விவசாய நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல், முன்னேற்றத்தை மீளாய்வுசெய்தல் என்பவற்றின் ஊடாக திணைக்களத்தின் திசைமுகப்படுத்தல் தொடர்பான தகவல்களை அறிவித்தல் இந்த பிரிவின் பிரதான கடமையாகும்.
சேவைகள்
- திணைக்கள செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்
- அமைச்சு மற்றும் திணைக்களத்தின் மூலமும் ஏனைய வழிகளிலும் கிடைக்கும் நிதி ஏற்பாடுகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்காக செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்.
- பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் கருத்திட்ட விபரங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
- அவற்றை முன்னுரிமைப்படுத்துதல்.
- கருத்திட்டத்திற்காக அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுதல்.
- செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்.
- அமைச்சு செயலாளரிடம் அங்கிகாரம் பெறுதல்.
- முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தல்.
- விவசாய அமைச்சுக்கும் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய நிறுவனங்களுக்கும் உரிய மாதிரிக்கு அமைவாக மாதாந்த மற்றும் காலாண்டு அறிக்ககைகளைச் சமர்ப்பித்தல்.
- குறித்த மாவட்டங்களிலிருந்து முன்னேற் அறிக்கைகளை அழைப்பித்துக்கொள்ளுதல்.
- முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல்.
- தகவல்களைப் பகுப்பாய்வுசெய்து சமர்ப்பித்தல்.
- திணைக்களத்தின் வசமுள்ள தரவுகளையும் தகவல்களையும் தயாரித்தல் மற்றும் தொடர்பாடல் (வள பக்கம்)
- திணைக்களத்திற்குரிய எண்ணிகை ரீதியாள தரவுகளைச் சேகரித்தல்
- தரவுகளைத் தயாரித்தல்
- இற்றைப்படுத்துதல் மற்றும் வெளியிடுதல். (வள பக்கங்களைத் தயாரித்தல் மற்றும் அச்சிட்டு வெளியிடுதல்)
- அனைத்து முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களையும் பதவிநிலை உத்தியோகத்தர்களின் கூட்டங்களையும் கூட்டுதல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
- கூட்டங்களுக்கு அழைப்புவிடுத்தல், நடத்துதல், கூட்ட அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தல்.
மேலதிக சேவைகள்
- வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அமைச்சுக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளுதல்.
- திணைக்களத்தின் துறைசார் கடமைகளையும் விடயப்பரப்பையும் தயாரித்தல்.
- அனைத்து முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அறிவித்தல் - அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்/ விசேட கருத்திட்டங்கள்/ வெளிநாட்டு உதவி கருத்திட்டங்கள்.
- விவசாய அமைச்சை முதன்மையாகக் கொண்ட ஏனைய அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் என்பவற்றின் மூலம் காலத்திற்குக்காலம் கோரப்படுகின்ற தகவல்களைத் தயாரித்து அனுப்புதல்.
- ONUR கருத்திட்டத்தைச் செயற்படுத்துதல்.
- பணியாட் தொகுதி கூட்டங்களை ஒழுங்குசெய்தல் மற்றும் அறிக்கைகளைத் தயாரித்தல்.
- பிரதி/உதவி ஆணையாளர்களின் மதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை ஒழுங்குசெய்தல் மற்றும் நடத்துதல்.
- வள பக்க தரவுகள் தகவல்கள் பதிவேடுகளைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தி பேணுதல்.
- கணக்காய்வு விசாரணைகளுக்கு பதிலளித்தல் மற்றும் கணக்காய்வுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல்.
- திணைக்கள தொலைபேசி பெயர்ப்பட்டியலைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தி பேணுதல்.
- அமைச்சின் செயலாற்றுகை அறிக்கைக்கு தகவல்களை வழங்குதல்.
- கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தினால் பணிக்கப்படுகின்ற ஏனை பணிகளை மேற்கொள்ளுதல்.
திருமதி. எல்.பீ. புத்திக்கா சுஜானி +94 704 419 915 |
பெயர் மற்றும் பதவி | பிரிவு | தொலைபேசி |
திரு. கே.எச்.சி.சி. குமாரசிங்க | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 704 419 910 |
திருமதி. ஐ.டீ. சமன்மாலி | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 768 967 725 |
திரு. எல்.ஏ.என்.எல். குணதிலக்க | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 768 750 647 |
திருமதி. ஜி.வீ. பாக்யா நிம்னாதி | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 754 044 985 |
திருமதி. எம்.எல்.எஸ். மதுஷிகா | அரச முகாமைத்துவ உதவியாளர் 111 | +94 704 419 930 |
திரு. கே.ஜி.எஸ்.எஸ். சேனாதீர | பட்டதாரி பயிலுனர் | +94 704 419 920 |
திரு. எஸ்.ஜி.எம். அம்பகல | தொழிலாளி | - |