நோக்கங்கள்

  • அரசாங்கத்தின் விவசாய கொள்கைகளுக்கு அமைவாக விவசாய காணிகளைப் பயன்படுத்துவது சம்பந்தமாக ஏற்பாடுகளைச் செய்தல்.
  • விவசாய காணி உரிமையாளர்கள், விவசாய காணிகள் உரித்தான விவசாயிகள் மற்றும் அனுபவ உரிமையாளர்கள்/ வாரக்குடி விவசாயிகள் ஆகியோரின் பயிர்ச்செய்கை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செயற்படுத்துதல்.
  • விவசாய அமைப்புகளை பதிவுசெய்தல் மற்றும் நடாத்துதல் தொடர்பான கட்டளைகளைத் தயாரித்தல் மற்றும் அந்த ஏற்பாடுகள் செயற்படுவதை உறுதிப்படுத்துதல்.
  • கமநல அபிவிருத்தி சபைகளை ஸ்தாபித்தல் மற்றும் அவற்றின் அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  • நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு கமநல அபிவிருத்தி சபை அதிகார பிரதேசத்திற்கும் உரியதாக விவசாய காணிகள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய விவசாய காணி பெயர் பதிவேடுகளைத் தயாரித்து திருத்தி மற்றும் மீள்நோக்கி பேணுதல்.
  • விவசாய காணிகளுக்கு உரியதாக வாரக்குடி விவசாயிகளின் பிரச்சினைகளையும் ஏனைய பிணக்குகளையும் தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுத்தல்.
  • சிறிய நீர்பாசனத் திட்டம் மற்றும் நீர் தோற்றுவாய்களின் உற்பத்தித்திறன், பாதுகாப்பு, பேணல் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றிற்கு ஏற்புடையதான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்.
  • கமநல அபிவிருத்தி சட்டம் மற்றும் அரசாங்க விவசாய கொள்கைகள் என்பவற்றை மீறி செயற்படுகின்ற தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
  • அரசாங்க விவசாய மற்றும் நடப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏனைய நிறுவனங்களுக்குத் தேவையான நிறுவன, சட்ட, உதவி செய்யும் மற்றும் முகாமைத்துவ சேவைகள் என்பவற்றை வழங்குதல்.

பொறுப்புகள்

  • விவசாயிகளின் விவசாய தேவைகளை நிறைவுசெய்வதன்மூலம் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக பின்னணியைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இடையீட்டாளர் ஒருவரின் வகிபாகத்தை நிறைவேற்றும் பொருட்டு ஒட்டுமொத்த கமநல சேவை நிலைய வலையமைப்பை செயற்படுத்துதல்.
  • இலங்கையில் விவசாய காணிகளிலிருந்து அதிசிறந்த உற்பத்தித்திறனைப் பெற்றுக்கொண்டு இலங்கைவாழ் விவசாய மக்களை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லுதல்
  • விவசாய காணிகளில் உற்பத்தித்திறனை அதிகரித்துக்கொள்ளுவதை நோக்கமாகக் கொண்டு விவசாய பாதைகள் இன்றி இருந்த காணிகளுக்கு விவசாய பாதைகளை அமைப்பதற்கு உரிய அங்கீகாரமளித்தல்.
  • இலங்கையில் விவசாய கொள்கையைத் தயாரிப்பதற்கு கமநல சட்டம், அதற்குரிய ஒழுங்கு விதிகள் என்பவற்றைத் தயாரிப்பதற்காக உரிய தகவல்களை அமைச்சுக்கு வழங்குதல் மற்றும் உதவுதல்.
  • திணைக்களம் மேற்கொள்ளுகின்ற சிறிய நீர்ப்பாசனம், கட்டிடங்கள், கமநல சேவை நிலையங்கள், மாவட்ட அலுவலகங்கள் என்பவற்றை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல் என்பவை தொடர்பான மதிப்பீடுகளை அனுமதித்தல்.
  • வருடாந்த ஒதுக்கீட்டு சட்டத்தில் அதிகாரம் கிடைத்த செலவுகளை முகாமைப்படுத்துவதற்கு நிதி பிரமாணங்கள், சட்டங்கள் ஒழுங்குவிதிகள், சுற்றறிக்கைகள் என்பவற்றை இணங்கியொழுகி செயலாற்றி தினசரி, மாதாந்த மற்றும் வருடாந்த கணக்கு அறிக்கைகளை ஒழுங்காகப் பேணுதல்.
  • சுயசக்தியுடனான பெருமிதமிக்க கமநல சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்குத் தேவைப்படும் நிதி சக்தியை அந்த சமூகத்தில் நிலைப்படுத்துவதற்காக விவசாய மக்களை ஒழுங்கமைத்தல், வலுவூட்டுதல், நிறுவன கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.
  • சிறிய நீர்பாசனத் திட்டங்களின் (கிராமிய) உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் அவற்றை முறையாக முகாமைப்படுத்துவதன் மூலம் அவற்றின் பாதுகாப்பையும் பேணலையும் உறுதிப்படுத்துவதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டங்களைத தயாரித்து செயற்படுத்துதல்.
  • வருடத்திற்குரிய கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்குரிய செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அதற்குரியதாக மாவட்ட மட்டத்தில் மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை நடத்துதல் மற்றும் முன்னேற்ற மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல், அந்த அறிக்கைகளை அமைச்சுக்கும் கணக்காய்வு பிரிவுக்கும் சமர்ப்பித்தல் மற்றும் வருடத்தின் செயலாற்றுகை அறிக்கையை தயாரித்து அமைச்சுக்கு சமர்ப்பித்தல்.