"இலங்கைவாழ் கமக்காரர் சமூகத்திலும் அனைத்து விவசாய காணிகளிலும் நிலைபேறான அபிவிருத்தி" என்ற கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் நோக்கை அடையும் பொருட்டு உற்பத்தித் திறன் விருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது ஒரு விசேட கடமையாகும். அத்துடன், அதற்காக 2011ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 28, 30(3), 32(1), 33(1) மற்றும் 34(1) ஆகிய உறுப்புரைகளை செயற்படுத்தும் பணிகள் இந்த பிரிவின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது.

வயல் காணியொன்றை வேறு பணிகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குதல், வயல் காணியல்லாத விவசாய மேட்டு நிலமாகப் பிரகடனப்படுத்துதல், விவசாயமல்லாத மேட்டு நிலமாகப் பிரகடனப்படுத்துதல், வயல் காணி பெயர்ப்பட்டியலில் பதியப்பட்டுள்ள வயல் காணியொன்றை அதிலிருந்து அகற்றி விவசாய மேட்டு நில பெயர்ப்பட்டியலில் சேர்த்தல், வயல் காணி பெயர்ப்பட்டியலில் பதியப்பட்டுள்ள வயல் காணியொன்றை அதிலிருந்து அகற்றுவதை மாத்திரம் மேற்கொள்ளுதல், வயல் காணி பெயர்ப்பட்டியலில் பதியப்பட்டுள்ள சூழல் ரீதியாக கூருணர்வுமிக்க வலயத்தில் அமைந்துள்ள வயல் காணியைப் பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு ஒப்படைத்தல் மற்றும் வயல் காணிகளில் உள்ள கனிய வளங்களை அகழும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குதல் என்பவை உற்பத்தித் திறன் விருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதான கடமையாகும்.

அத்துடன், தரிசான வயல்களில் பல்வருடமல்லாத பயிர்களை குறித்த பயிர்ச்செய்கை போகத்தில் மாத்திரம் பயர்ச்செய்தல், பல்வருடமல்லாத பயிர்களை ஆகக் கூடியது அடுத்தடுத்து 3 வருடங்களில் பயிர்ச்செய்தல், பல்வருடமல்லாத பயிர்களை தொடர்ச்சியாகப் பயிர்ச் செய்வதற்கு அல்லது விவசாய பயிர்ச்செய்கையைத் தவிர்த்து ஏனைய விவசாய பணிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளுதல் மற்றும் பல்வருட (நிலையான) பயிர்களைப் பயிர்ச்செய்தல் அல்லது காடு பயிரிடல் போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் என்பவையும் இந்தப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

dummy gதிருமதி. டீ.சீ. நிஷாதி அபேசேகர
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்
பெயர் பதவி
திருமதி. டீ.சீ. நிஷாதி அபேசேகர உதவி ஆணையாளர்
திருமதி. எஸ்.சி.எம். வீரசிங்க முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
திருமதி. என்.டபிள்யு.பி. விக்கிரமநாயக்க கமநல அபிவிருத்தி நிலைய முகாமைத்துவ உதவியாளர்
செல்வி. எச்.பி.டீ.என். பிரியங்கனி பட்டதாரி பயிலுனர்
திருமதி. டபிள்யு.ஜி.எம். சுரங்கி பட்டதாரி பயிலுனர்
செல்வி. எஸ்.யு. குருகே பட்டதாரி பயிலுனர்
செல்வி. ஏ.ஐ. விமலவீர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
செல்வி. ஏ.எம்.எஸ்.கே. அமரசிங்க முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
செல்வி. பி.எஸ். நில்மினி முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
செல்வி. ஜீ.கே.ஜே.எம்.எம். பிரபாகுமாரி முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
செல்வி. எம்.எஸ். சமரசிங்க அலுவலக சிற்றூழியர்
செல்வி. டீ.ஆர்.கே. திஸாநாயக்க அலுவலக சிற்றூழியர்