‍கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கணக்கு பிரிவு 4 பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. நிதி பிரிவு, கொடுப்பனவு மற்றும் சுருக்க பிரிவு, சம்பள மற்றும் முற்பண கணக்கு பிரிவு மற்றும் விலைமனு கோரல் பிரிவு என்பவை அந்த நான்கு பிரிவுகளாகும். நிதி பிரிவு, வருடாந்த வரவுசெலவு திட்டத்தைத் தயாரித்தல், அக்கறை பணத் தேவையைப் பெற்றுக்கொள்ளுதல், திறைசேரியுடன் குறித்த இணைப்பாக்கத்தை நிறைவேற்றுதல் மற்றும் வருடாந்த ஒதுக்கீட்டு கணக்கைத் தயாரித்தல் என்பவற்றிற்குரிய பணிகளை நிறைவேற்றுகிறது. கொடுப்பனவு மற்றும் சுருக்க பிரிவு திணைக்களத்தின் அனைத்து கொடுப்பனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், 25 மாவட்ட அலுவலகங்களில் கொடுப்பனவு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல், மாதாந்த கணக்கு சுருக்கத்தை ஒருங்கிணைத்து திறைசேரிக்கு சமர்ப்பித்தல், மற்றும் பொது வைப்புக் கணக்குகள் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறது. சம்பள மற்றும் முற்பண கணக்கு பிரிவு, தலைமை அலுவலகத்தின் சம்பளம் மற்றும் முற்பணம் என்பவற்றைச் செலுத்துதல் மற்றும் 25 மாவட்ட அலுவலகங்களுக்கு உரிய சம்பளம் மற்றும் முற்பணம்; செலுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்பார்வைசெய்தல் மற்றும் அறிக்கைகளைப் பேணுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுகிறது. விலைமனு கோரல் பிரிவு தலைமை அலுவலகத்தின் விலைமனு கோரல் மற்றும் களஞ்சிய நடவடிக்கைகள் என்பவற்றுடன் 25 மாவட்ட அலுவலகங்களுக்கு உரிய விலைமனு கோரல் மற்றும் களஞ்சிய நடவடிக்கைகளை நிர்வகிக்கும் மேற்பார்வை செய்யும் பணிகளை மேற்கொள்ளுகிறது.

சேவைகள்

  • வருடாந்த ஒதுக்கீட்டு சட்டத்தில் அதிகாரம் கிடைத்த செலவுகளை முகாமைப்படுத்துவதற்கு நிதி பிரமாணங்கள், சட்டங்கள் ஒழுங்குவிதிகள், சுற்றறிக்கைகள் என்பவற்றை இணங்கியொழுகி செயலாற்றி தினசரி, மாதாந்த மற்றும் வருடாந்த கணக்கு அறிக்கைகளை ஒழுங்காகப் பேணுதல்.
  • வருடாந்த செலவு மற்றும் வருமான மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
  • சொத்துக்களை முகாமைப்படுத்துதல்.
  • திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் என்பவற்றின் சம்பள கடன் முற்பணம், பொது வைப்புகள் என்பவை உள்ளிட்ட செலவுகள் மூலதன மற்றும் மீண்டுவரும் செலவினங்களைச் செலுத்தும் நடவடிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் செலவுகளை முயாமைப்படுத்துதல்.
  • திணைக்களத்திலும் மாவட்ட அலுவலகங்களிலும் விலைமனுக் கோரல் குழுக்களை அமைத்தல் மற்றும் விலைமனுக் கோரவட பணிகளை நிறைவேற்றுதல் மற்றும் கண்காணித்தல்.
  • அரச உத்தியோகத்தர்களின் முற்பணம், பீ கணக்கிலிருந்து கடன் வழங்குதல் அவற்றை ஒழுங்காக அறவிடுதல் மற்றும் அதுசம்பந்தப்பட்ட அறிக்கைகளையும் கணக்குகளையும் பேணுதல்.
  • திணைக்களத்தில் மாதாந்த மற்றும் வருடாந்த கணக்குகளைத் தயாரித்தல் மற்றும் உரிய நேரத்திற்கு குறித்த நிறுவனங்களுக்குச் சமர்ப்பித்தல்.
  • திணைக்களம் தொடர்பாக அரச கணக்குகள் செயற்குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு உரிய தகவல்களைச் சமர்ப்பித்தல் மற்றும் அதற்குரிய பணிகளை நிறைவேற்றுதல்.
  • கமநல அபிவிருத்தி நிதியத்திற்கு உரியதாக வருடாந்த வரவுசெலவு மதிப்பீட்டைத் தயாரித்தல், பெறுகைகள் மற்றும் செலுத்தல்கள் என்பவற்றை முகாமைப்படுத்துதல் மற்றும் இறுதி கணக்குகளைத் தயாரித்தல்.
  • கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தின் பெயரில் கிடைக்கும் அனைத்து கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில் அளித்தல்.

பதவிநிலை உத்தியோகத்தர்கள்

dummy b

திரு. பி.ஈ. விதானகமகே
பிரதான கணக்காளர்

+94 112 692 540

பெயர் மற்றும் பதவி பிரிவு தொலைபேசி
செல்வி. கே.ஜி.எஸ். மதுவந்தி
கணக்காளர்
சம்பளம் / முற்பணம் +94 112 674 482
திருமதி. ஜி.ஏ.டீ.பி. விஜேரத்ன
கணக்காளர்
பெறுகைகள் +94 112 674 480
திருமதி. எம்.கே.ஐ. மதுபானி
கணக்காளர்
கொடுப்பனவுகள் மற்றும் சாராம்சம் +94 112 681 837